Sunday, May 9, 2010

ஆஸ்கார் விருது திரைப்படம் கார்ட் லொக்கர் இணையத்தில் பார்வையிட

ஆஸ்கார் விருது திரைப்படம் கார்ட் லொக்கர் இணையத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Watch Hurt Locker movie online : Click Here to watch

Watch Hurt Locker movie online

Watch Hurt Locker movie online : Click Here to watch

Friday, May 7, 2010

பிலிப்பீன்ஸில் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்??

பிலிப்பீன்ஸில் மே 10ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்று அதிபர் குளோரியா அர்ரோயோவின் பேச்சாளர் புதன் கிழமை தெரிவித்தார்.

வாக்குகளை எண்ணும் சாதனங்களில் தொழில் நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

“தேர்தல் தேதியைவிட தானியக்கச் சாதனம் சிறப்பாகச் செயல்படுவதே முக்கியம் என்று நினைக் கிறேன்” என்று பேச்சாளர் கேரி ஒலிவார் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

வாக்குகளை எண்ணும் 76,000க்கும் மேற்பட்ட சாதனங்களின் கணினி சில்லுகள் மாற்றப் படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்தினம் அறிவித்தது. திங்கட்கிழமை நடத்தப்பட்ட இறுதிக்கட்டச் சோதனையின் போதுதான் கணினி சில்லுகளில் இருந்த கோளாறு தெரிய வந்தது.

இந்தக் கோளாறால், வாக்குச்சீட்டுகளிலுள்ள வாக்காளர் பெயர்களைச் சாதனத்தால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்று அதிபரின் பேச்சாளர் கூறிய போதிலும், தேர்தலுக்கு முன்பாக சரியாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்தில் பாரபட்சம் - ஆந்திர மாநில மனித உரிமை கமிஷனில் வக்கீல் புகார்!!!

ஆந்திர மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் சுபாஷன் ரெட்டி. இவரிடம் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் மூர்த்தி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

இங்கு தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் சாதாரண பக்தர்களை இங்கு கேவலமாக நடத்துகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமியை பார்த்து தரிசனம் செய்யும் முன்பு ஓரிரு வினாடிகளில் இழுத்து தள்ளி விடுகிறார்கள். பெண் பக்தர்கள் என்று கூட பார்ப்பதில்லை.

அதேபோல் கியூ காம்ப்ளக்சுகளில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்கிறார்கள். கூட்டம் இல்லாத நாட்களில் கூட பக்தர்களை அடைத்து வைத்து திடீரென திறந்து விடுகிறார்கள். இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 22-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவுக்கு, மனித உரிமை கமிஷன் தலைவர் சுபாஷன் ரெட்டி நோட்டீஸ் அனுப்பினார்.

அணுவாயுதப் பேச்சில் கலந்துகொள்ள தயார்: வட கொரிய தலைவர் கிம் ஜோங் இல்

அணுவாயுதம் தொடர்பில் ஆறு நாடுகள் நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வட கொரியா தயாராக உள்ளது என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் இல் கூறியுள்ளார்.சீனா சென்றுள்ள கிம், சீன அதிபர் ஹு ஜின்டாவிடம் இவ்வாறு கூறியதாக தகவல் சாதனங்கள் கூறின.
சீன அதிபருடன் கிம் நான்கு மணி நேரம் பேசியதாகவும் அப்போது கிம் இந்த உறுதியை அளித்ததாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியது. 68 வயதாகும் கிம் திங்கட்கிழமை சீனா வந்து சேர்ந்தார். கிம்மின் இந்த சீன வருகையின்போது, அணுவாயுதப் பேச்சில் வட கொரியா கலந்து கொள்வதுபற்றி அவர் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வட கொரியத் தலைவர் நேற்று சீனப் பிரதமர் வென் ஜியாவ்பாவ், துணை அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பொருளியல் ஒத்துழைப்பு குறித்து கிம் சீனத் தலைவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.